கணவனை வாழ்த்தியும் அதே நேரத்தில் அவன் கடமையை சுட்டிக் காட்டியும் மிக அருமையாய் அமைந்த பாடலிது.
திரைப் படம்: ஆனந்தி (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமுர்த்தி
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
http://www.divshare.com/download/11771467-13b
உன்னை அடைந்த மனம் வாழ்க...
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...
நல்ல வாழ்வும் வளமும் மலர்க...
உன்னை அடைந்த மனம் வாழ்க...
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...
நல்ல வாழ்வும் வளமும் மலர்க...
திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத் தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ...
திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத் தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ...
நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா உன் மனம் மலர்க...
தினம் உன்னால் என் சுகம் வளர்க...இனி என்னால் உன் நிலை உயர்க...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ...
உன்னை அடைந்த மனம் வாழ்க...
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...
நல்ல வாழ்வும் வளமும் மலர்க...
எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய...
எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய...
இந்த பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம் தன்னால் காத்தருள் புரிக...
குறை இல்லாத வாழ்வொன்று அருள்க...
துணை என்னோடு நீ கொள்ள வருக...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ...
உன்னை அடைந்த மனம் வாழ்க...
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...
நல்ல வாழ்வும் வளமும் மலர்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக