பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா

அன்பர்களே, சில பாடல் வரிகளில் இலக்கணத் தவறுகளை இப்பொழுதுதான் கவனித்தேன்.

நான் 11ஆம் வகுப்பு வரை தமிழ் முறையில்தான் படித்தேன். இருந்தாலும் சமீப காலமாக தமிழில் எழுதுவதோ படிப்பதோ குறைந்து தமிழ் தடுமாற்றம் ஆகிவிட்டதோ என்று பயம் வந்து விட்டது. அதுவும் இப்பொழுது நான் இருக்கும் இடத்தில் மாலையில் 30 அல்லது 40 நிமிடங்கள் மட்டுமே தமிழ் நண்பர்களுடன் பேச வாய்ப்பு உள்ளது. நானும் முடிந்தவரை தவறு வராமல் எழுத முயற்சிக்கிறேன். என்னையும் மீறி ஏதும் தவறு நேர்ந்தால் அன்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த பகுதியை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

திரைப் படம்: நீதி தேவன் 1971


இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்: SPB, PS

நடிப்பு : ஜெயஷங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா



http://www.divshare.com/download/11709224-317


மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

குங்கும சாந்துக்கு மேலே... இளம் கூந்தலின் சாலைக்கு கீழே... மங்களமாய் ஒரு முத்தம் கொடுத்திட மாப்பிள்ளை வரலாமா..அதில் மனவினை பெறலாமா...

செங்கனி இதழ்களின் மேலே...அது தேன் மொழி பேசிடும் போதே...பங்குக்கு நாலெனெ பழங்கல் பறித்து பந்தியில் இடலாமா.. அதை நான் பசியுடன் பெறலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா...

நான் மடியில் வரலாமா...

மேடிட்ட மணலினில் படுத்து.. சிறு கோடிட்ட புன்னகை விரித்து..தேனிட்ட முகத்துக்கு நான் இட்ட நகைகளை சோதனை இடலாமா..இன்ப வேதனை படலாமா...

பொங்கிடும் ஆற்றினில் குளித்து...வரும் போதையிலெ மனம் நனைத்து... சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா...அதிலும் சமரசம் அறிவொமா...

முப்பால் முழுவதும் படித்து.. படித்து அதற்கப்பாலும் நடை எடுத்து..

எப்போதும் இது தப்பாதென்பதை இதயத்தில் அறிவோமா...

காலை உதயத்தில் எழுவோமா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக