பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 ஜூன், 2010

நிலவும் மலரும் பாடுது

ஒரு இனிமையான பாடல்

தேன் நிலவு (1960)
இசை: ஏ எம். ராஜா
நடிப்பு: ஜெமினி, வைஜயந்திமாலா




http://www.divshare.com/download/11670081-09d




நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா

மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா

தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா

மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா

இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே

முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா

கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

மலர் முடிப்போம் மணம் பெறுவோம்

மாலை சூடுவோம்

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் கானம் பாடுவோம்

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

இதைவிட இனிய கானம், தேனமுது அற்புத பாடல், அழகிய குரல்கள், சிறந்த இசை உள்ள பாடலை கேட்பது அரிது. மறக்க முடியாத பாடல்.

கருத்துரையிடுக