இது தமிழ் உதயனின் விருப்பமான பாடல் மட்டுமில்லை. நமக்கும் பிடித்தது.
திரைப் படம்: தாம்பத்யம் ஒரு சங்கீதம் (1982)
பாடியவர்:ஜெயசந்திரன்
இசை; விஸ்வனாதன்
http://www.divshare.com/download/11810173-15e
நீலக்கருவிழியில் ஒலை கொண்டு மை எழுதி
ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி
வாரி தலைசீவி, வகிடெடுத்து பின்னலிட்டு
வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ
நான் தாயுமானவன்
தந்தையானவன்
அன்பு சேவகன்
அருமை நாயகன்
நான் தாயுமானவன்
தந்தையானவன்
அன்பு சேவகன்
அருமை நாயகன்
அடி நானே உனது உயிர்க்காப்பு
கண்ணே நானே இடுவேன் வளைகாப்பு
அடி நானே உனது உயிர்க்காப்பு
கண்ணே நானே இடுவேன் வளைகாப்பு
நானே இடுவேன் வளைகாப்பு
நான் தாயுமானவன்
தந்தையானவன்
அன்பு சேவகன்
அருமை நாயகன்
புன்னகையில் முத்தெடுத்தும் இள மானே
அதை கண்ணிரண்டில் சிந்தி விட விடுவேனோ
புன்னகையில் முத்தெடுத்தும் இள மானே
அதை கண்ணிரண்டில் சிந்தி விட விடுவேனோ
நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே
முன்னை போல் அதிர நடக்காதே
நெஞ்சதில் எதையும் நினைக்காதே
முன்னை போல் அதிர நடக்காதே
வைரத்தை சுமக்கும் இடையோடு
தங்கமே மெதுவாய் நடைபோடு
தங்கமே மெதுவாய் நடைபோடு
நான் தாயுமானவன்
தந்தையானவன்
அன்பு சேவகன்
அருமை நாயகன்
பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்
அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்
பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்
அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்
திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
முத்தங்கள் கனிவாய் தரும்போது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
நான் தாயுமானவன்
தந்தையானவன்
அன்பு சேவகன்
அருமை நாயகன்
2 கருத்துகள்:
மிக்க நன்றி சார். கேட்டு வெகு நாள் ஆன பாடல்.
Hi Ashok,
It makes me really happy by listening/downloading the songs with lyrics.
Pl. send me a good tamil font software to express my feelings & thoughts in a better way.
sethu.
கருத்துரையிடுக