பின்பற்றுபவர்கள்

சனி, 26 ஜூன், 2010

பண்ணோடு பிறந்தது தாளம்...

என் வாழ்க்கையிலும் இந்த இடுகை ஆக்கத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் மனைவிக்காக இந்த பாடல்.

ஒரு நாளும் பாடாத உள்ளம்...இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

உண்மையாகவே...

திரைப் படம்:  விடி வெள்ளி (1960)

இயக்கம்: ஸ்ரீதர்

இசை: A M ராஜா
நடிப்பு: சிவாஜி கணேசன், S V ரங்காராவ், சந்திரபாபு, பாலாஜி, சரோஜா தேவி, M N ராஜம், சாந்தகுமாரி

பாடியவர்கள்: ஜிக்கி, P B ஸ்ரீனிவாஸ்

http://www.divshare.com/download/11818732-8b4

ம் ம் ம் ம் ம் ம்

பண்ணோடு பிறந்தது தாளம்... பண்ணோடு பிறந்தது தாளம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நானம்....பண்ணோடு பிறந்தது தாளம்...

கண்ணோடு கலந்தது காட்சி...அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி..

கண்ணோடு கலந்தது காட்சி...அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி..

மண்ணோடு மலர்ந்தது மானம்...குல மகள் கொண்ட சீதனம் யாவும்...

பண்ணோடு பிறந்தது தாளம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நானம்....பண்ணோடு பிறந்தது தாளம்...

செல்வோம் என்றே ஆசை எண்ணும்...

அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்...

செல்வோம் என்றே ஆசை எண்ணும்...

அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்...

சொல்வோமென்றே உள்ளம் ஓடும்...

வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்...

ம் ம் ம் ம் ம் ம் ம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நானம்....பண்ணோடு பிறந்தது தாளம்...

ஒரு நாளும் பாடாத உள்ளம்...இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

ஒரு நாளும் பாடாத உள்ளம்...இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

படிக்காத பாடங்கள் சொல்லி...முன்பு பழகாத கல்விக்கு தான் இந்த பள்ளி...

காணாத கதை இன்று காண்போம்...அதை கண்டாலே பேறின்பம் தோன்றும்...

காணாத கதை இன்று காண்போம்...

ஆ ஆ ஆ ஆ ஆ ... ம் ம் ம் ம் ம் ம்......

2 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

beautiful!

பெயரில்லா சொன்னது…

திரு அசோக் ராஜ்

"பண்ணோடு பிறந்தது தாளம் " மிக அருமையான பாடல்.நினைவுகள் எல்லாம் எங்கோ பறந்து போய் வந்தன.
பால்ய வயதின் நினைவுகளை கிளற வைத்து விட்டீர்கள்.இந்த பாடலின் ஒலி தரமாக உள்ளது.
மிக்க நன்றி.

அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக