பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தமிழும், கவிதையும், இசையும் குரலும் இனிமை இனிமை


திரைப் படம்: வாழ்விலே ஒரு நாள்

இசை; T G லிங்கப்பா, C N பாண்டுரங்கன்

பாடியவர்கள்: TMS, ஜீவரத்தினம்

நடிப்பு; சிவாஜி, G வரலக்ஷ்மி




http://www.divshare.com/download/11712179-d73



தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தேன் மலர் சோலையிலே ஸ்ருங்கார வேளையிலே..

தேன் மலர் சோலையிலே ஸ்ருங்கார வேளையிலே..

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...



ஓ..ஓ..ஓ..ஆ..ஆ...ஆ..

அம்புலி அழகை கண்டு...அல்லி மலர் ஆசை கொண்டு...

அம்புலி அழகை கண்டு...அல்லி மலர் ஆசை கொண்டு...

அன்புடன் முகம் மலர்ந்து சந்தோசமாய் தனை மறந்து...

அன்புடன் முகம் மலர்ந்து சந்தோசமாய் தனை மறந்து...

ஆனந்தம் காணும் ஸ்ருங்கார வேளையிலே..

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...



யாழின் சுவை மேவும் அமுத பண்பாடும்...

யாழின் சுவை மேவும் அமுத பண்பாடும்...

அழகின் தெய்வ சிலையே வாராய்...



ஏழையின் வாழ்வினிலே இன்பம் மலர்ந்திடுமா..

ஏழையின் வாழ்வினிலே இன்பம் மலர்ந்திடுமா..

இதய காதல் என்றும் நிலைக்குமா..



காதலர் உள்ளம் கலந்த பின்னாலே...

காதலர் உள்ளம் கலந்த பின்னாலே...பேதம் ஏது புவிமீது...

பேதம் ஏது புவிமீது...



என்னாசை கன்னா உன்னை என்னாலுமே நான் மறவேன்...

என்னாசை கன்னா உன்னை என்னாலுமே நான் மறவேன்...



ஆனந்தம் காணும் ஸ்ருங்கார வேளையிலே..



தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தேன் மலர் சோலையிலே ஸ்ருங்கார வேளையிலே..

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

5 கருத்துகள்:

vijayan சொன்னது…

இப்பாடலில் வரும் பெண்குரல் திருமதி.U .R .ஜீவரத்தினம்.அவர் இப்படத்தின் தயாரிப்பாளர் .

நானானி சொன்னது…

விஜயன் சரியாகச் சொல்லியுள்ளார்.

அது, ஸ்ருங்கார வேளையிலே’ அல்லவோ!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

Unknown சொன்னது…

திரு விஜயன் மற்றும் நானானி.
திருத்தங்களுக்கு நன்றி.. முதலில் பாடலை கேட்கும் போது பெரிய நாயகி என்று குறிப்பிட்டு இருந்ததால் பின்னர் மாற்றத்தை கவனிக்கவில்லை. அதே போல 'ஸ்ருங்கார வேளையிலே' தெரிந்தே செய்த தவறு என்று நினைக்கிறேன். நிச்சயமாக இசை ப்ரியர்களுக்கு இது திருப்தி அளிக்காதுதான்.

நானானி சொன்னது…

நான் பழைய பாடல்கள் பிரியை ஆதலால் வார்த்தைகள் தவறினால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே?

Unknown சொன்னது…

மேடம்,
சரியாகத்தான் சொன்னீர்கள். தவறுகளைச் நீங்கள் சுட்டிக் காட்டவில்லை என்றால் நிச்சயமாக எனக்குத்
தெரிய வாய்ப்பில்லாமல் போகும். தொடர்ந்து உலாவுங்கள். உங்கள் ஆதரவுக்கு தொடர்ந்து நன்றி சொல்வேன்.

கருத்துரையிடுக